மாநில அரசுகள் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினந்தோறும் பதிவாகி வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெரும் கவலைக்குரியதாகியுள்ளது.
ஓராண்டுகளுக்கும் மேலாக பீடித்து வந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை எட்டி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 59 ஆயிரத்து 856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும் ஒரே நாளில் 630 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் அடுத்த ஒரு மாதம் அதிக எச்சரிக்கை தேவை என்று மத்திய அரசின் கொரோனா நிபுணர் குழுவின் தலைவரான வி.கே.பால் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா சோதனையை அதிகப்படுத்துவதோடு தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். விரும்புவோருக்கு தடுப்பூசி என்பதை விட அதிக பாதிப்புள்ளோருக்கு, தேவையானவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாதிப்பு தற்போது அதிகமாகி வருவதால் அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமானது. அனைத்து மாநிலங்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE