ர்ச்சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் யோசனை தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். நாளை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
மழை விவரம் : -
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார். பெரம்பலுார், அரியலுார், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.தமிழகம், புதுச்சேரியில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
இதனால், பிற்பகல் முதல், காலை வரை புழுக்கமாக இருக்கும்; இயல்புக்கு மாறாக வியர்க்கும்.தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளவும். வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிவதும் சிறந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE