Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 April 2021

யாருக்கெல்லாம் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது? எதிலெல்லாம் கவனம் தேவை?

ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோய் என்பது உலகம் முழுவதிலும் இருக்கும் பொதுவான பிரச்னை. ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 85% பேர் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் இறக்கின்றனர்


இதயம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கு தலைவன் எனலாம். ஏனெனில் அதுதான் உடல் உறுப்புகளுக்குத் தேவையான இரத்தத்தை சுத்திகரித்து வெளியீடு செய்கிறது. அதன் ஆரோக்கியத்தை பொருத்துதான் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியமும் உள்ளது. அது ஒரு கனம் நின்றாலும் உறுப்புகள் செயலிழக்கும். அப்படி யாருக்கெல்லாம் இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் :
 உயர் இரத்த அழுத்த பிரச்னை இதய பாதிப்பை தீவிரமாக்கும். இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது இதய நோய் வரக்கூடும்.

கொழுப்பு : 
இதயத்திற்கு கொழுப்பைக் கண்டால் முற்றிலும் ஆகாது. எனவே அதிக கெட்டக் கொழுப்பு சேர்ந்தால் அவை உடலில் ஆங்காங்கே தேங்கிவிடும். இதனால் இரத்தம் சீராக பாய முடியாது. ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் நெஞ்சு வலி உண்டாகும். மாரடைப்பு வரும்.

நீரிழிவு நோய் :
 சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை எனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து இதய நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

உடல் பருமன் :
 உடல் பருமன் பல வகையான நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக சிறுநீரகப் பிரச்னை, டைப் 2 சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே சீரான உடல் எடையைப் பராமரிப்பதே இதற்கு தீர்வு.

உடல் உழைப்பு இல்லாமை :
 ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான உடல் உழைப்பே உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை. அதில் உடல் உழைப்பு முற்றிலும் இல்லை எனில் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் உண்டாகும். இவை இரண்டுமே இதய பாதிப்புகளுக்கான அறிகுறியாக உள்ளது.

புகைபிடித்தல் :
 புகைபிடிக்கும் பழக்கம் இதயத்தை பாதிக்கும் என்பது பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இது இதயத்தின் இரத்த நாளங்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மன அழுத்தம் : 
அதிக ஸ்ட்ரெஸ் கூட இதய நோய்க்கு காரணமாக அமையும். எப்போதும் பிசியான வாழ்க்கை, படபடப்பான தருணங்கள், தொடர் சிந்தனை என இருந்தால் அதன் பாதிப்பு இதயத்தைதான் தாக்கும். எனவே உடலை பராமரிக்க அமைதியான நிலையையும் நாடுங்கள். யோகா அல்லது உங்கள் மன அமைதிக்கான விஷயங்களை செய்யுங்கள்.

குடும்ப வரலாறு : 
வீட்டில் தொடர்ந்து யாருக்கேனும் இதய பாதிப்புகள் உள்ளது எனில் அது உங்களுக்கும் தொடரலாம்.

வயது : 
ஆண் 45 மற்றும் பெண் 55 வயதைக் கடந்தாலே இதயத்தின் ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வயது செல்ல செல்ல உறுப்புகளும் தேய்மானம் அடைகின்றன. இதனால் பல உடல் ஆரோக்கிய கேடுகள் வரலாம். குறிப்பாக இதய பாதிப்புதான் அதிகம் இருக்கும். எனவே கவனமாக இருப்பது அவசியம்..


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES