இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகளுடன் இணையம் வழியாக ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா தொற்று, நாட்டில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதன் விவரங்கள் என அனைத்தையும் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சுகாதார செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 93,249 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட இந்தியாவின் மொத்த பாதிப்பில் சுமார் 81 விழுக்காடு இந்த 8 மாநிலங்களில் இருந்துதான் கண்டறியப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனையை அதிகரிக்கவும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இரண்டாம் கட்ட கிருமிப் பரவல் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதிலும் மார்ச் மாதம் முதல் கிருமித்தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
இவ்வாண்டின் முதல் இரு மாதங்கள் மட்டும் நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் தொற்று நிலவரம் கட்டுக்குள் இருந்தது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE