தமிழகம், புதுச்சேரியில், வரும் 7ம் தேதி வரை, பெரும்பாலான இடங்களில், கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இயல்பை விட, 4 முதல், 6 டிகிரி செல்ஷியஸ் வரை, கூடுதல் வெப்பம் பதிவாகும்.மாநிலத்தின் பல இடங்களில் அனல் காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.நேற்றைய நிலவரம்நேற்று பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்றும், புழுதியுடன் கூடிய சூறை காற்றும் ஆங்காங்கே வீசியது. சில இடங்களில் தரைக்காற்று பலமாக வீசி அச்சுறுத்தியது.
பகலில் பெரும்பாலான இடங்களில், காலை முதலே வறண்ட வானிலை நிலவியது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி, திருப்பத்துார் மற்றும் வேலுாரில், 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.கரூர் பரமத்தி, திருத்தணி, 42; ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், 41; தர்மபுரி, 40; கடலுார், 39; சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலையம், நாகை, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த இடங்களின் வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.சென்னை, கடலுார், நாகை, திருப்பத்துார், திருத்தணி, திருச்சி, வேலுாரில் இயல்பான அளவில் இருந்து, 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை : வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. எனவே, சென்னை முதல் துாத்துக்குடி வரையிலான துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் கூண்டை குறைக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திஉள்ளது.
source-https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE