Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 April 2021

உணவு,போக்குவரத்து வசதி கிடைக்காமல் தேர்தல் பணி செய்த பெண் ஊழியர்கள் அவதி

உணவு, போக்குவரத்து வசதி இல்லாமல் பெண் ஆசிரியர், அலுவலர்கள் கடும் அவதியடைந்தனர். ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலைகளிலும் பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்றினர். இவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் பெண் ஆசிரியர்களாவர். ஏப்.5ல் மூன்றாம் கட்ட பயிற்சி நடந்த அன்று பயிற்சி நடந்த இடத்தில் இருந்து அவரவருக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றனர்.

 கூடுதலாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டு ஒவ்வொரு யூனியன் தலைமையிடத்திலும் அரசு அலுவலகங்கள், தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஏப்.5ம் தேதி பிற்பகலில் இருந்து இரவு வரை கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பெண் ஆசிரியர், ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் தேர்தல் நாளில் இரவு 7மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் நேற்று அதிகாலை வரை எடுக்கப்பட்டது. இதனால் வாக்குச்சாவடியிலேயே இரவு முழுவதும் பெண் ஆசிரியர், அலுவலர்களும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி இல்லை. இதுபோல் ரிசர்வில் தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கியிருந்த ஊர்களில் பெரும்பாலான ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அவர்கள் கூறியதாவது: தேர்தல் அன்று இரவு முழுவதும் வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் கடும் அவதியடைந்தோம். தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து என எந்த வசதியும் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெண் ஆசிரியர், பெண் அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இது போன்ற குழப்பத்தை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றனர்..






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES