Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 April 2021

கொரோனாவின் கோரத்தாண்டவம்!-இந்தியாவை மிரட்டும் 3ம் வகை கொரோனா: மும்முறை மாற்றம் கண்ட பயங்கரம்

வீடியோவை காண இங்கே கிளிக்செய்யவும் 

👇👇👇



தடுப்பூசி, எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் இந்தியாவை மிரட்டும் 3ம் வகை கொரோனா: மும்முறை மாற்றம் கண்ட பயங்கரம்

நாட்டில் 3வது வகை உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கடந்த 2 மாதங்களாக இருப்பதும், அது தற்போது தலைநகர் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் ஏற்கனவே பரவி உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், மக்கள் பெரும் பீதியிலும், குழப்பத்திலும் இருக்கின்றனர். 

கொரோனா தொற்றின் 2வது அலையால், உலகளவில் நேற்று மாலை நிலவரப்படி 14 கோடியே 39 லட்சத்து 62 ஆயிரத்து 157 பேர் பாதித்துள்ளனர். 30 லட்சத்து 61 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவிலான பாதிப்பில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி, 2வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. 

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 774 பேர் பாதித்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 பேர் பலியாகி உள்ளனர். 

கொரோனா 2வது அலை மிக தீவிரமாக இந்தியா உள்பட உலக நாடுளில் பரவி வரும் நிலையில், பி.1.167 என்ற புதிய 3வது வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது நமது நாட்டில் கண்டறியப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த புதிய 3வது வகை உருமாறிய கொரோனா வைரசின் 2 ரகங்கள் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES