அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, செயலாளர் டாக்டர் தாகிர் உள்ளிட்ட 8 டாக்டர்கள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசு டாக்டர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு, 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறுஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி உரிய காலக்கட்டத்தில் அரசு டாக்டர்களின் ஊதியத்தை மறுஆய்வு செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்கள், சொற்ப தொகையை ஊதியமாக பெறுகின்றனர். எனவே, அரசாணையின்படி ஊதியத்தை மறுஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், “2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக்கோரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி மனு கொடுத்தும் 6 மாதங்களாக அதை அரசு கிடப்பில் போட்டுள்ளது. சொந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்துதமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க கடந்த முறை இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது” என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
தெரிவிக்க வேண்டும்
இதற்கு மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அரசு டாக்டர்களின் ஊதியம் தொடர்பான அரசாணையை அமல்படுத்தப்படுமா, இல்லையா? என்பதை வருகிற 29-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
source https://www.dailythanthi.com/ via kalvitamilnadu.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE