சாம்சங் கேலக்ஸி ஏ31
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி ஏ31 மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனிற்கு எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு அல்லது செஸ்ட்மனி பயன்படுத்தி கேலக்ஸி ஏ32 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. கேஷ்பேக் சலுகையை தொடர்ந்து எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என மாறி இருக்கிறது. கேலக்ஸி ஏ31 புதிய விலை விரைவில் விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இந்தியா தளங்களில் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இதுதவிர தனியார் நிதி நிறுவனங்களின் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோரின் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள அப்கிரேடு வவுச்சர் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் தொகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மை கேலக்ஸி செயலியில் சாம்சங் அப்கிரேடு -- செக் டிவைஸ் எக்சேன்ஜ் வேல்யூ ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.
இத்துடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. செஸ்ட்மனி பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE