நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் படிப்படியான தளர்வுகள் வழங்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு அறிவித்த நாள் முதல், நகரம் மட்டுமின்றி கிராம மக்களும் விதிமுறைகளை கடைப்பிடித்து வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.
ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்பு மாணவர்கள் கடந்த ஓராண்டிற்கு மேலாக வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏராளமான பள்ளிகள், மொபைல்போன் வழியே பல மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. பல்வேறு பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் எடுக்கப்படுகிறது. இவைகளுக்கு மொபைல் போன்களே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நாள் முழுவதும் பல மணிநேரம் மொபைல் போன்களை கூர்மையாக பார்த்து சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இணைய விளையாட்டுகள் சிறுவர்கள், இளைஞர்களை ஈர்த்து நிரந்தரமாக அவர்களை அடிமையாக்குகிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்தவர்கள் தற்போது முழுமையாக நாள் முழுவதும் அதிலேயே மூழ்கியுள்ளனர்.
மேலும் இணைய விளையாட்டுகள் சிறுவர்கள், இளைஞர்களை ஈர்த்து நிரந்தரமாக அவர்களை அடிமையாக்குகிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்தவர்கள் தற்போது முழுமையாக நாள் முழுவதும் அதிலேயே மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மொபைல்போனை நீண்ட நேரம் பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக்குறைவும், மனதளவில் பாதிப்பும் ஏற்படும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இதுபோன்ற இணையதள விளையாட்டுகள் கிராமங்களிலும் அதிகமாக ஊடுருவி விட்டது.
பள்ளிகளில் நேரடியாக வகுப்பு எடுப்பது போல் காலை, மதியம் என இரு வேளைகளிலும் பல மணிரேம் மொபைல் போன் வழி ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது ஆபத்தான ஒன்று. இதனால் மாணவர்களுக்கு நன்மையைவிட தீமையே அதிகம். இது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE