தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போவதாக தகவல் பரவியது குறித்து, விளக்கம் அளித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறையுடன் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக, சத்யபிரதா சாகு தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக கூறிய தலைமைத் தேர்தல் அதிகாரி, திட்டமிட்டபடி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என தெரிவித்தார்.
தமிழகத்தில் திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6 பதிவான வாக்குகள் வரும் மே 2 ம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த நிலையில் கொராோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதம் வாக்கு எண்ணிக்கை தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வந்தது.
இது குறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வாக்கு எண்ணிக்கையின் போது ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர், சுகாதார துறையுடன் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கை தேதியை ஒத்தி வைப்பது குறித்து எவ்விதமான ஆலோசனையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் என்னென்ன பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளவுள்ளோம் என்பது குறித்து நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் தலைமைச்தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்தார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE