கொரோனா பரவலால், அடுத்த மாதம் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளி கல்வித் துறையின், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளஸ் 2 மாணவர்களுக்கு, தற்போது நடத்தப்படும் செய்முறை தேர்வுகள் மட்டும், திட்டமிட்டபடி உரிய நாட்களில் நடத்தப்படும். வரும், 5ம் தேதி துவங்க இருந்த பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என, முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி விபரம், பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு துவங்குவதற்கு குறைந்த பட்சம், 15 நாட்களுக்கு முன், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படும்.
இந்த விபரங்கள், தலைமை ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். செய்முறை தேர்வை ஏற்கனவே திட்டமிட்ட தேதியில், கொரோனா தடுப்பு வழிகாட்டலை பின்பற்றி, நடத்தி முடிக்க வேண்டும்.
செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நாட்களில், ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE