சென்னை: முதல் தடுப்பூசி போடப்பட்ட காலத்தில் தொற்று வருவதற்கான வாய்ப்பு உண்டு. இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 14 நாட்கள் முடிந்த பிறகு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு நோய் தொற்றை எதிர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இரண்டு தடவை வேக்சின் எடுத்துக் கொள்ளும் போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது. நிமோனியாவின் தாக்கம் அதிகம் இருக்காது. அதனால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம். அப்படியே வந்தாலும் சளி, காய்ச்சலோடு போய்விடும் என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர், எட்டு பேருக்கு கொரோனா தொற்று வருகிறது. அதற்கு காரணம், திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள் நிகழ்ச்சி என குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது முகக்கவசம் அணியாததே. தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். அதுவும் போடாமல் தள்ளிப் போடுவதால் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி வந்து சேரவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி வர வேண்டுமானால் தடுப்பூசி போட்டுக் ெகாண்டால் 20 சதவீதம் எதிர்ப்பு சக்தி வந்திருக்கும்.
கொரோனா முதல் அலை குறைந்து, தற்போது மறுபடியும் அதிகரித்து இருக்கிறது. அதனால் அதை இரண்டாவது அலையாக எடுத்துக் கொள்ளலாம். எப்படியானாலும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். ஒரு நாளைக்கு 180 பேருக்கு மேல் அட்மிட் ஆகி வருகிறார்கள். கொரோனா தாக்கம் எல்லா வயதினரையும் தாக்கி இருக்கிறது. அதனால் தொற்று வேகமாகவும் இருக்கிறது. முதல் தடுப்பூசி போடப்பட்ட காலத்தில் இன்பெக்சன் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதுவே வல்லுநர்கள், ஐசிஎம்ஆர் கூறுவது என்னவென்றால், இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டு அதன்பிறகு 14 நாட்கள் முடிந்த பிறகு எதிர்ப்பு சக்தி ஏற்படும். அப்போதுதான் அந்த நோய் தொற்றை எதிர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இரண்டு தடவை வேக்சின் எடுத்துக்கொள்ளும் போது தீவிர தொற்று ஏற்படாது, உயிரிழப்பு ஏற்படாது. நிமோனியாவின் தாக்கம் அதிகம் இருக்காது. அதனால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம். அப்படியே வந்தாலும் சளி, காய்ச்சலோடு போய்விடும்.
கோவாக்சின், கோவி ஷீல்டு என இரண்டு விதமான வேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்சின் டெத் கொரோனா வைரசில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே பாதுகாப்பானது. மக்கள் எதைவேண்டுமாலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம். ஆண்களை விட பெண்களுக்கு பாதிப்பு குைறவாக இருப்பதற்கு காரணம் நிறைய காரணங்கள் இருக்கிறது. கோவாக்சின் தற்போது 500க்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கோவி ஷீல்டு சிலருக்கு காய்ச்சல் ஏற்படுத்தினாலும் இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 650 பேர் வரைக்கும் போட்டுக்கொள்கிறார்கள். அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு போடுகிறார்கள்.
மேலும் ஊரடங்கு எதுவாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டியதை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை, நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். அரசு சொல்லும் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் மருத்துவர்களை நேரடியாக அணுக வேண்டும். அவர்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE