இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
அதன்படி, தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 4,206 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 1,05,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 11,065 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,81,988 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
kalvitamilnadu.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE