Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 April 2021

செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தோவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தலையொட்டி தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.

பிளஸ 2 பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக அந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தோவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால், திட்டமிட்டபடி தேர்வை நடத்தவே தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில்தான், செய்முறைத் தேர்வின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில்

1. தேர்வுக் கூடங்கள் செய்முறைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

2. செய்முறை தேர்வு முடிந்ததும் அனைத்து சாதனங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்

3. தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

4. ஒவ்வொரு மாணவருக்கும் 4 சதுர மீட்டர் தொலைவில் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்ட வேண்டும்.

5. தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.

6. கிருமிநாசினி தீப்பற்றும் தன்மை கொண்டதாகும். எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்

7. கையில் கிருமிநாசினி பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொடக் கூடாது.

8. செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

9. செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

10. உள்காற்றை வெளியே தள்ளும் மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.

11. அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.

12. தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.

13. மாணவர்கள் சொந்தமாக கிருமிநாசினி, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.

14. ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பின்பும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

15. ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

16. ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பிரிவு மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

17. அந்த ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

18. பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்திருக்க வேண்டும்.

19. கழிவறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

20. மாணவர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதியை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பார்.

21. நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி செய்து தருவார்.

22. வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. வாய்வழியாக ரசாயனங்களை உறிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது..

23. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்மூலம் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES