தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மரத்வாடா முதல் தென் தமிழக கடலோரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது வரையிலான மழையும்,தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், நாகை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
25, 26 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், 27, 28 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE