"மே1 முதல் ஆசிரியர்கள் வரத் தேவையில்லை; வீட்டிலிருந்தே மாணவர்களை தயார்படுத்தலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 28, 2021, 06:37 PM
கொரோனா பரவல் காரணமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா தீவிரமாக பரவி வரக் கூடிய சூழலில், ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என்றும், இதுகுறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE