Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 April 2021

தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுமா? - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்



இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 0.04% பேருக்கும், கோவிஷீல்ட் எடுத்துக் கொண்டவர்களில் 0.03% பேருக்கும் மட்டுமே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

“தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுமா?” - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்ட பின்னரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, “நாட்டில் இதுவரை மொத்தம் 1.1 கோடி பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 17,37,178 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 4,208 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 695 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை 11.6 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. இதில் 1,57,32,754 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 17,145 (0.02%) பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்களில் 5,014 (0.03%) பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி குறித்து ஏராளமான வதந்திகள் மக்களிடையே பரவி வரும் நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்குப் பிறகான தொற்று விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES