நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து பிஎச்டி, எம்ஃபில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அவகாசம் தரவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்தது.
அதையேற்று ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் நீட்டித்தன. எனினும், தொற்றின் தீவிரம் தணியாததால் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாத நிலை நீடிப்பதாக யுஜிசிக்கு மாணவர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தொற்று பரவல் முழுமையாக விலகாத நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் டிச.31-ம் தேதி வரை தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கலாம். அதற்கான அனுமதியை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE