இடைநிலை ஆசிரியரல்ல-இழிநிலை ஆசிரியர்
இடைநிலை ஆசிரியருக்கு.. குறிப்பாக 2009க்குப்பின் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மற்றுமொரு தூக்கம் வராத இரவாகவே இன்றைய இரவு கழியும்..
கோரிக்கை தவறு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தருகிறோம் என்றீர்கள்...??
கூப்பிடுவது என்னவோ இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று ஆனால் ஒவ்வொரு முறையும் நடப்பது என்னவோ மூத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே... பணப்பலன் தற்போதைய ஒரு நபர் சித்திக் ஊதிய குழுவில் 65 ஆயிரத்து 500 எட்டிய மூத்த ஆசிரியர்களுக்கு 75 ஆயிரத்து 600 வரை ஊதியத்தை 5 செல்கள் கூடுதலாக மாறறிக்கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையிலும் முன்தேதியிட்டு இன்று ஏறக்குறைய 50 பதவிகளுக்கு 50 அரசாணைகளை வெளியிட்டு ஊதியம் மாற்றம் செய்த தமிழக அரசு..இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாளைய வாழ்வாதார கோரிக்கை யை கடைநிலையில் விட்டுவிட்டது..
என்றாவது நமக்கான ஊதிய மாற்ற அரசாணை வந்துவிடாதா..என்று காத்திருந்தவர்களுக்கு இன்றும் ஏமாற்றமே மிச்சம்...
இதை எதிர்த்து எந்த சங்கமும் பதிவிட்டதாக தெரியவில்லை.. (சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைத் தவிர..)
இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய Level மாற்றம் செய்யப்பட்டாலே தேக்கநிலை ஊதிய உயர்வுப்பிரச்சினையும் சரிசெய்யப்பட்டுவிடும் என்ற நிலையில்
மாறாக இன்று இடைநிலை ஊதிய அணியில் 5 cell கூட்டியதை வெற்றி வெற்றி என கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்...
சித்திக் ஒருநபர் குழுவின் பரிந்துரையின் பேரில் இத்தனை பதவிகளுக்கு முன்தேதியிட்டு அரசாணை வெளியிட்டு ஊதிய மாற்றம் செய்யும் தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றம் செய்யவில்லை ஆசிரியர் சங்கங்கள் மட்டும் தான் காரணம்...
மற்ற அனைத்து துறைகளிலும் மூத்தவர்களுக்கோ அல்லது கடை நிலையில் உள்ளவர்களுக்கு பாதிப்பு என்றால் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் இந்த ஆசிரியர் இனத்தில் மட்டும் ஒவ்வொரு முறையும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்காக உண்மையாக குரல் கொடுக்க எந்த மூத்த இயக்கமும் இல்லை...
எனவே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றம் செய்ய உளப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இடைநிலை ஆசிரியர்களை போராட்டம் செய்ய பயன்படும் பகடைக்காய்களாக மட்டும் எண்ணிட வேண்டாம்..
இடைநிலை ஆசிரியர்கள் அவல நிலை
சந்தா தொகை மட்டும் வசூலிப்பது நோக்கமல்ல அனைவரும் பணம் பலனைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இயக்கங்கள் செயல்பட்டால் காலம் தாண்டி இயக்கம் இருக்கும்... சுய நலமாக செயல்பட்டால் மூத்த இயக்கங்கள் அனைத்தும் விரைவில் அழியும்.
2012ல் பணி நியமனம் பெற்று தற்போது வரை எந்த ஊக்க உயர்வும் பெறாத இடைநிலை ஆசிரியர் 9 ஆண்டு ஊதிய உயர்வுக்கு பிறகு தற்போது Level-10 cell - 10 ல் 26900 பெற்று வருகின்றோம்.
ஓய்வு பெறும் நாள்வரையிலும் எங்களால் தளம் 40 ஐ அடையவே முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்...
ஒரு இடைநிலை ஆசிரியர் தனது அடிப்படை ஊதியத்தில்(20200) இருந்து பட்டதாரி ஆசிரியரின் அடிப்படை ஊதியத்திற்கு (36400) செல்ல வேண்டும் என்றால் இருபது ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
இருபது ஆண்டுகள் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர் ஊதியமும் இருபது ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பணிநியமனம் பெறும் ஒரு பட்டதாரி ஆசிரியர் ஊதியமும் ஒன்று...
ஆசிரியர் இனங்களிலே..சபிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட இனம் இடைநிலை ஆசிரியர் இனம்..
இந்த அவல நிலையை நீக்க முயலுங்கள்.
இதுவே இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கின்ற உண்மையான வெற்றி..
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றிட முடியவில்லை எனில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை வெளியேற்றுங்கள்...
நாங்கள் எங்களுக்காக செயல்பட்டுக் கொள்கிறோம் உங்களுக்காக நீங்கள் செயல்பட்டுக் கொள்ளுங்கள் என்று.
அதன் பின்பு கொண்டாடுங்கள் வெற்றி வெற்றி என்று இது ஏமாற்று வேலை செய்து பெற்ற வெற்றி...
வேதனையின் உச்சத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் குமுறல்.......
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE