பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கவர்னர் சக்தி காந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசு லாபமீட்டாத பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. பிப்., முதல் தேதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இத்திட்டம் முன்மொழியப்பட்டது. கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை அரசு திரும்பப் பெறுவதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தை பொதுத் துறை வங்கியின் ஊழியர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
“அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் பொதுத்துறை வங்கிகளால் செயல்படுத்தப்பட்டு வரும் சமயத்தில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டம் தேசிய நலனுக்கு விரோதமானது” என வங்கி தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறின.
அரசுடன் பேச்சுவார்த்தை.
இந்நிலையில் டில்லியில் இந்திய பொருளாதார மாநாடு 2021 நடந்து வருகிறது. அதில் பேசிய ஆர்.பி.ஐ., கவர்னர் சக்தி காந்த தாஸ், “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது தொடர்ந்து நடக்கும். தொற்றுநோய் பல பகுதிகளில் உயர்ந்திருந்தாலும், பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிப்பது தடையின்றி நடக்கும். அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் என்ற எங்கள் ஆய்வில் மாற்றம் ஏற்படாது.” என்றார்...
source -தினமலர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE