அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தலைவர் டி.பி.சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நாட்டில் அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது கல்லுாரி நிர்வாகத்தினரின் பொறுப்பு. கொரோனா காலத்திலும் அனைத்து சவால்களையும் சமாளித்து 'ஆன்லைனில்' பாட வகுப்புகளை நடத்தி தேர்வையும் நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
அதேநேரம் தேசிய கல்வி கொள்கையின் படி கல்வியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து விடக் கூடாது. அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளிலும் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து முதல் 10 பேர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.இந்த குழுக்கள் கல்வி தர மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
source- dinamalar
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE