🔲நாட்டில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் தேர்தல்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
🔲தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன
🔲இந்த நிலையில், தேர்தலின் போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுவான நெறிமுறைகள்..
1. தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
2. தேர்தல் பயன்பாட்டுக்கான பகுதிகளின் நுழைவாயிலில் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
3. வாக்குச்சாவடிகளில் கைகளை சுத்தம் செய்யும் திரவம் (கிருமிநாசினி), சோப்பு, தண்ணீர் ஆகியவை இருக்க வேண்டும்.
4. சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
5. கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற தேர்தல் தொடர்பான ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்குப் போதிய வாகன ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
தேர்தல் காலம் முழுவதும் இத்தகைய நோய்த் தடுப்பு நடைமுறைகளைக் கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் தொகுதிவாரியாக சுகாதார அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டியவை
1. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதற்கான இடத்தைப் பொறுத்து 6 அடி இடைவெளியுடன் 15 - 20 நபர்கள் நிற்பதற்கான அடையாள வடிவங்கள் இடம்பெறலாம்.
2. வாக்களிக்க வருபவர்கள் முகக் கவசத்துடன் வரவில்லை என்றால், அவர்களுக்கு வாக்குச்சாவடியில் முகக்கவசம் வழங்கும் வகையில் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.
3. வாக்காளரின் அடையாளத்தை அறிய வேண்டிய தருணத்தில் முகக் கவசத்தை கீழ் இறக்க வேண்டும்.
4. வாக்காளர் பட்டியலில் கையெழுத்திடவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கவும், வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட வேண்டும்.
5. கரோனா நோயாளிகள் கடைசி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE