Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

29 March 2021

ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை- சுகாதாரத்துறை செயலாளர்

ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை கொரோனா அதிகரித்தால் அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு வரும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4, 5வது மாடியில் தயாராக உள்ள கோவிட்-19 வார்ட்டை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளது. மத்திய அரசு சார்பாக நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக வெளியிட்ட 46 மாவட்டங்களில் தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களும் உள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரே நாளில் 2 சதவீதத்திற்கும் மேலாக பொதுமக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் 100 பேருக்கு சோதனை செய்தால் 4 பேருக்கு பாசிட்டிவ் வருகிறது. மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

அபார்ட்மென்டில் கொரோனா வேகம்
ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், ‘‘கூட்டு குடியிருப்பு பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது, என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் 51% பேரும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 42% கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோன்று 45 வயதிற்கு மேல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்களில் உள்ள இறப்பு சதவீதம் 90 ஆகவும், 18-45 வயது வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் இறப்பு 9 சதவீதமாகவும் உள்ளது.

கண்காணிப்பில் தொய்வு  சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளை கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இப்படி இருந்தால் பாதிப்பு அதிகமாக தான் வாய்ப்பு உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES