Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

30 March 2021

இந்த 8 வங்கிகளின் வங்கி கணக்கு, செக் புக், பாஸ்புக் இனி ஏப்ரல் 1 முதல் செல்லாது

இந்திய வங்கிகளை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகவும், வாராக் கடனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு வங்கிகளைப் பெரு வங்கிகளுடன் இணைத்தது.

இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டது.

ஏப்ரல் 1 கடைசி

இதன் வாயிலாகத் 
தேனா வங்கி, 
விஜயா வங்கி, 
கார்ப்பரேஷன் வங்கி, 
ஆந்திர வங்கி, 
சிண்டிகேட் வங்கி, 
ஓரியண்டல் வங்கி, 
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா 
மற்றும் அலகாபாத் வங்கி 

ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களின் செக் புக் மற்றும் பாஸ்புக் ஏப்ரல் 1, 2021 முதல் செல்லாது.

8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள்

இதன் மூலம் இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட புதிய வங்கிகளிடம் புதிய செக் புக் மற்றும் பாஸ்புக் வாங்கிக்கொள்ள வேண்டும். இதேபோல் இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கின் IFSC மற்றும் MICR கோட் மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான விபரங்கள

இந்த 8 வங்கிகளில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், உங்கள் கணக்கிற்கு மொபைல் எண், முகவரி, நாமினி பெயர் போன்றவற்றைக் கட்டாயம் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்.

வங்கி கணக்கு எண் மாற்றம்

இதுமட்டும் அல்லாமல் மேலே குறிப்பிடப்பட்டு உள்ள 8 வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் கணக்கு எண் ஏப்ரல் 1 முதல் மாற உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களைக் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும், கணக்கில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்தவும் புதிய பாஸ்புக் பெறுவது கட்டாயம்.

இதற்காக ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் இணைக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்குப் புதிய செக் புக் மற்றும் பாஸ்புக் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் பிற வங்கிகளும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் திவால்

மத்திய அரசு ஆகஸ்ட் 2019ல் சுமார் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்தது. இதன் மூலம் பொதுத்துறை வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வாரக் கடன் பிரச்சனையைப் பெரிய அளவில் குறைத்ததோடு, ஆபத்தில் இருக்கும் வங்கிகளைத் திவால் ஆகாமல் தடுக்கப்பட்டது. இதேபோல் 2017ல் 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்து வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES