Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 March 2021

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர்.

* ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர் உள்ளனர்.

* பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர்.

* ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் ஆகும்.

* தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

* தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

* கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம்.

* கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

source-dailythanthi

அரசு ஊழியர்களின் மனக்குமுறல்

என்ன தான் தேர்தல்பணி என்பது முதன்மைப்பணியாக இருந்தாலும் வாக்குப்பதிவு நேரம் *காலை 7 - மாலை 7* என்பது பணியாற்ற உகந்த நேர அளவா?

கொரோனா பெருந்தொற்று அதிகரிக்கும் இக்கால கட்டத்தில் 12 மணிநேர தேர்தல் பணி என்பது பணி செய்ய சாத்தியமானதா?

அந்த 12 மணி நேர அளவு கடந்து காலை 4 மணி முதலே ஆயத்தப்பணி தொடங்கி செய்யும் நேரம் கணக்கில் வாராதது.

இப்படி தான் பணியாற்ற வேண்டுமெனில்
காலை உணவு இடைவேளை
மதிய உணவு இடைவேளை
மாலை சிற்றுண்டி இடைவேளை கண்டிப்பாக தேர்தல் ஆணையம் நேரக்கணக்கில் வெளியிட சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்

வாக்குச்சாவடிக்கு செல்வது முதல் இல்லம் திரும்பும் வரை (அது எந்த நேரமாயினும்) பேருந்து வசதி செய்யப்பட்டு பாதுகாப்பாய் வீடுதிரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் கால முன்களப்பணியாளரான நமக்கு தேர்தல் ஆணையம் இந்த கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தனிநபருக்கு  *ஒரு கோடி* ரூபாய்க்கு காப்பீடு செய்ய வேண்டும்.
இதை கட்டாயம் சங்கங்கள் வலியுறுத்தி ஆசிரியர் பாதுகாப்பை நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்.

ஏனெனில் கடந்த கால தேர்தல் வரலாறுகள் அனைவரும் அறிந்த ஒன்றே

நமது கோரிக்கைகள் நியாயமானது
அதை செயலாக்க செய்யவேண்டிய பொறுப்பு நமதானது.

உலக வரலாற்றிலேயே தொடர்ந்து இடைவெளியற்று 12 மணிநேர பணி என்பது இதுவரை இல்லாத ஒன்று.

எனவே இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES