சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் நான்கு வார இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது நான்கு வாரங்களாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸின் கால அளவை 6 முதல் 8 வாரங்களாக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பூசியின் பலன் அதிகமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கால அவகாச நீட்டிப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கோவாக்சின் தடுப்பூசியை வழக்கமான கால இடைவெளியிலேயே செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE