சென்னை: அரசு மருத்துவர் ராமலிங்கம் கூறியதாவது: உலக அளவில் எல்லா நாடுகளிலும் இரண்டாவது அலை சென்று கொண்டிருக்கிறது. நமது நாட்டில் முதல் அலை கடந்த ஆண்டு மே, ஜூன் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் வரை இருந்தது. கடந்த ஜனவரியில் தான் கொரோனா முதல் அலை இறங்கியது. இப்போது, மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. இது, இரண்டாவது அலையா என்று கேட்டால் இருக்கலாம். கொரோனா முதல் அலை வரும்போது நாம் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு போட்டோம். இதனால், இந்தியாவை பொறுத்தவரை 21 விழுக்காடு மக்கள்தான் கொரோனாவை எதிர்கொண்டு இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. மீதமுள்ள 80 % பேர் கொரோனாவில் இன்னும் சிக்கவில்லை. இப்போது இரண்டாம் அலை ஏறும்போது, மீதமுள்ள 80 % மக்கள் சிக்க போகிறார்கள் என்று அர்த்தம். இப்போது கொரோனா ஏறுகிறது என்றால் நாம் பொதுமுடக்கத்தை முற்றிலுமாக கைவிட்டு விட்டோம்.
மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். இதனால், வேக,வேகமாக மீண்டும் கொரோனா பரவுகிறது. இப்படியே விட்டால் இது, பொது முடக்கத்தை நோக்கி தான் செல்லும். அதற்கு முன்னதாக நாம் பழைய மாதிரி முகக்கவசம் அணிய வேண்டும். இதை செய்தாலே அடுத்த அலையை கொஞ்சம் தள்ளி போடலாம். எதிலும் முழுமையாக வெற்றி பெற முடியாது. முழுமையாக வெற்றி பெற வேண்டுமென்றால் 3 வருடம் கழித்துதான் வெற்றி பெற முடியும். 100ல் 70 %பேர் இந்த நோய்க்கு சிக்கிதான் ஆக வேண்டும். எப்படி இருந்தாலும் ஒரு தொற்று வந்தால் 80 %மக்களை பதம் பார்க்காமல் விடுவதில்லை. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவில் சிக்கி கொண்டால் சிகிச்சை அளிப்பது என்பது மிகக்கடினம். எனவே, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கூட்டம் கூட்டமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE