கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். மேலும் ஏப்ரல் 30, 2021 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஆரம்பத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட பொது முடக்கம் தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பரவலில் புதிய அதிகரிப்பை கருத்தில் கொண்டு, வழிகாட்டுதல்களை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்த மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்து மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
ஆர்டி-பி.சி.ஆர் (கொரோனா) சோதனைகளின் விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்கள் அதை விரைவாக அதிகரிக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவான 70 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதை அடைய வேண்டும்.
தீவிரமான சோதனையின் விளைவாக கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகளுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சையளித்து ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த நெறிமுறையின்படி, நோய் பரவலின் தொடர்புகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநிலங்களின் வலைத்தளங்களில் வெளியிடப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய உள்ளூர் மாவட்டம், காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும், குறிப்பாக நெரிசலான இடங்களில் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாநில அரசாங்கங்கள் அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்கும்.
முகக்கவசம், கைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கடுமையாக அமல்படுத்துவதற்கு, மாநிலங்கள் பொருத்தமான அபராதம் விதித்தல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை பரிசீலிக்கலாம்.
COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்கள் நிலைமையை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில், மாவட்ட / துணை மாவட்டம் மற்றும் நகரம் / வார்டு மட்டத்தில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
மாநிலங்களுக்கு இடையில் மற்றும் உள்-மாநில போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை.
அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் நபர்கள் மற்றும் பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இருக்காது. அதெற்கென தனி அனுமதி / ஒப்புதல் தேவையில்லை.
அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அனுமதிக்கப்பட்டுள்ளன.
COVID-19 க்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்துதல் சீராக நடந்து கொண்டிருக்கும்போது, வேகம் வெவ்வேறு மாநிலங்களில் சமமாக இல்லை. மேலும், சில மாநிலங்களில் தடுப்பூசியின் மெதுவான வேகம் கவலைக்குரியது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி, தற்போதைய சூழ்நிலையில், பரிமாற்ற சங்கிலியை உடைக்க மிகவும் முக்கியமானது.
எனவே, அனைத்து மாநில அரசாங்கங்களும் தடுப்பூசியின் வேகத்தை விரைவாக அதிகரிக்க வேண்டும்.
source -oneindia
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE