தமிழகத்தில், கொரோனா தொற்று தடுப்பு காரணமாக, ஓர் ஆண்டாக பள்ளிகள் இயங்கவில்லை.ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, ஒரு மாதம் மட்டும் பள்ளிகள் நடத்தப்பட்டு, தேர்வுகள் இன்றி, அனைவருக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்புக்கு ஆல் பாஸ் வழங்கியதால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என, வழி தெரியாமல் பள்ளி கல்வித் துறை தவித்து வருகிறது.பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே, மாணவர்கள் பிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வர். அவர்களின் மதிப்பெண்ணை பார்த்து, பள்ளிகள் தரப்பில் மாணவர்களுக்கு எந்த பிரிவில் சேர்த்தால், அவர்களால் படிக்க முடியும் என, திட்டமிடுவர்.
இந்தாண்டு அதற்கான வாய்ப்புகள் இல்லாததால், பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தலாமா என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மாணவர்களுக்கு பிடித்தமான பாடம் எது; எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு திறன் உள்ளது.அவர்களது உயர்கல்வி நோக்கம் என்ன என்ற விருப்பம் மற்றும் திறனை அறியும் வகையில், இந்த நுழைவு தேர்வு நடத்தலாமா என, ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில தனியார் பள்ளிகள் தற்போதே, பிளஸ் 1 சேர்க்கைக்கான முன் பதிவை துவக்கி உள்ளன.விண்ணப்பம் பெறும் மாணவர்களிடம், சேர்க்கைக்கு முன் பள்ளி அளவில் சிறிய தேர்வு நடத்த, பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
source dinamalar
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE