Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 March 2021

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்,ஊக்க ஊதியம்,காலமுறை ஊதியம், 17B,மருத்துவ காப்பீடு


திமுக தேர்தல் அறிக்கை, 2021 வெளியிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் முதல் சட்மன்ற கூட்டத்தொடரிலே அமல்படுத்தப்படும் - தி.மு.க தலைவர். மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. அதோடு இடைநிலை ஆசிரியர் ஊதிய முரன்பாடு மற்றும் பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு திரும்ப வழங்கபடும்.

த.நா. அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்திலும், கடந்த ஜனவரி மதுரை த.நா.அரசு ஊழியர் சங்க மாநாட்டிலும் திமுக தலைவர் உறுதியளித்தவாறு புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும்,

உயர்கல்விக்கு பயில்வோருக்கு அண்ணா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, கடந்த ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படும், என்றும்

பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்கள் குடும்ப நல நிதி ரூ.5 இலட்சமாக உயர்த்தப்படும்,

இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்,

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிர்வாகத்தீர்ப்பாயம் (Administrative Tribunal) அமைக்கப்படும்,

பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மீது 17ஆ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆசிரியருக்கு பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், கூடுதல் பலனளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது




💐💐 திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு!


💐💐💐  சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் 20000 ஆசிரியர்கள் கோரிக்கை மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல மாற்றம் செய்யப்படும்!   

💐💐💐 தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்படும்!

  💐💐 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்!


💐💐 அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்!


💐💐 மாணவர்களுக்கு காலை பால் வழங்கப்படும்!

💐💐 கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை!


💐💐 நீட் தேர்வு ரத்து செய்ய சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்படும்!

💐💐 பெண்  ஊழியர்களுக்கு 12 மாத கால பேறுகால விடுப்பு!

💐💐 6- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  டேப்!

💐💐 கல்வி நிறுவனங்களுக்கு Wi-Fi வசதி
.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES