இந்தியாவில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, ஜன., 16ம் தேதி துவங்கியது. சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட, முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
சந்தேகம்
தற்போது, 45 முதல், 59 வயது வரையிலான நாள்பட்ட நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின், முதல், 'டோஸ்' போட்ட நான்காவது வாரத்தில், இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, இந்த அவகாசத்தை, ஆறு முதல், எட்டு வாரமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து, 34 லட்சம் கோவிஷீல்டு; 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி என, 39 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன. இதில், 21 லட்சம் தடுப்பூசிகள், தகுதியானவர்களுக்கு போடப்பட்டுள்ளது.தடுப்பூசிகள் வீணாகுவது மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத ஒன்று.
அந்த வகையில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதால், 10 முதல், 20 சதவீதம் வரை மட்டுமே தடுப்பூசி வீணாகி உள்ளது. மற்ற அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சேமிப்பு
தமிழகத்தை பொறுத்தவரை, 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசியை மாத, ஆண்டுக் கணக்கில் சேமித்து வைக்க முடியாது. அதற்கேற்ற சூழலில் சேமித்து வைப்பது, மருத்துவ ரீதியில் ஏற்புடையது அல்ல. சில நாட்களில் மத்திய அரசிடமிருந்து, 10 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. தடுப்பூசி போடும் பணி எவ்வித தொய்வுமின்றி, தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
source- dinamalar
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE