கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 9முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கு தேர்சி என்று மட்டுமே மதிப்பெண் சான்றிதழிலில் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடங்களுக்கான மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படாது என்றும் 11-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE