Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 February 2021

வீட்டு கடன் வாங்கியுள்ள SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகை

சட்டவிரோத உடனடி கடன் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் - எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

வீட்டு கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு SBI ஒரு சிறந்த சலுகையை அளிக்கிறது. இந்த அறிவிப்பின் கீழ் நீங்கள் ஏற்கனவே இயங்கும் வீட்டுக் கடனில் மேல் கடன் பெறலாம்.



நாம் அனைவரும் இண்டர்நெட் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் மொபைல்களில் அடிக்கடி ஒரு பாப் அப் மெசேஜ் வருவதை பார்த்திருப்போம். இண்டர்நெட்டை திறந்தாலே இந்த பாப் அப் வருவது பலருக்கு சகஜமாகி விட்டது. இப்போது அனைவரும் அனைத்து விஷயங்களும் வேகமாக நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு உடனடி கடன் கிடைக்கும் என்று கூறுவார்கள். பண தேவை இருப்பவர்கள் அதை முதலில் கிளிக் செய்து பின் சிக்கலில் சிக்கிக்கொள்வதை நாம் செய்திகளில் கேள்வி பட்டிருப்போம்.

இந்த உடனடி கடன் என்ற ஒரு விஷயம் 99% பொய் என்று பல வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான SBI தற்போது வெளியிட்டுள்ள செய்தியைத்தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.

உங்கள் கணக்கு காலியாக இருக்கலாம்:

எஸ்பிஐ (SBI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு ட்வீட்டை ட்வீட் செய்துள்ளது, அதில் SBI வாடிக்கையாளர்கள் உடனடி கடன் (Loan) என்பது பற்றிய லிங்க் ஏதேனும் தென்பட்டால் அதை கிளிக் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளது. அப்படி நீங்கள் செய்தால் மோசடி (Fraudsters) செய்பவர்கள் உங்கள் வங்கி கணக்கை காலி செய்ய வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி செய்தியை போஸ்ட் செய்துள்ளது. "மோசடி உடனடி கடன் ஆப்ஸ்களில் ஜாக்கிரதை! அங்கீகரிக்கப்படாத லிங்க்ஸ்களைக் கிளிக் செய்யாதீர்கள் மேலும் எந்தவொரு நிறுவனத்திற்கும் உங்கள் வங்கி சார்ந்த விவரங்களை வழங்க வேண்டாம்." வெறும் ஐந்து நிமிடங்களில், உங்களுக்கு கடன் கிடைக்கும். ஆவணங்கள் தேவையில்லை... உடனே கிளிக் செய்யுங்கள்.. என்பன போன்ற மெசேஜ் வந்தால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

சைபர் கிரிமினல்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதை:

டிஜிட்டலாக இருப்பதற்கு பல நன்மைகள் உள்ளன, ஆனால் சில அதிலும் குறைபாடுகளும் உள்ளன. டிஜிட்டல் இந்தியாவின் இந்த சகாப்தத்தில், ஒரே கிளிக்கில் உங்கள் கணக்கு காலியாக மாறவும் வாய்ப்புள்ளது. யாரவது உங்களிடம் நாங்கள் இந்த வங்கியிலிருந்து பேசுகிறோம். நீங்கள் எங்களிடம் கடன் பெற தகுதியானவர். 5-10 நிமிடங்களில் காகித வேலை இல்லாமல் உங்களுக்கு கடனை வழங்குகிறோம் என்று கூறினால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற மொபைல் கால்கள் உங்களை சிக்கலில் தள்ளிவிடும். கடன் தேவைபடுபவர்களுக்கு உதவும் SBI:

வீட்டு கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு SBI ஒரு சிறந்த சலுகையை அளிக்கிறது. இந்த அறிவிப்பின் கீழ் நீங்கள் ஏற்கனவே இயங்கும் வீட்டுக் கடனில் மேல் கடன் பெறலாம். "SBI Home Top Up Loan" என அறியப்படும் இந்த சலுகையின் கீழ், இணையத்தில் இந்த கடனை வெறும் 4 கிளிக்குகளில் பெறலாம். இந்த கடனை மிக எளிதாக பெற, நீங்கள் SBI YONO மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது மட்டுமல்லாது யாராவது கடன்களைப் பெற விரும்பினால், ஒருவர் நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டும் அல்லது அவர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்க வேண்டும், பிறகு வங்கியின் சட்ட திட்டங்களுக்கு CIBIL ஸ்கோர் அடிப்படையில் நீங்கள் தகுதியானவர் என்றால் வாடிக்கையாளருக்கு தொந்தரவில்லாத கடன் வழங்கப்படும் என்றும் SBI கூறியுள்ளது.

கடன் வழங்கல் பற்றிய அனைத்து விவரங்களும் SBI வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன, கடன் பெறுவது பற்றிய சந்தேகம் இருந்தால் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைக்கலாம். அழைத்து கடன்களைப் பற்றி மேலும் அறியலாம் என்று SBI கூறியுள்ளது. இதைத்தவிர, எந்தவொரு ஆவணங்களையும் டவுன்லோட் அல்லது உரியவரிடம் கொடுப்பதற்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் ஆப்ஸ் அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

நாம் அனைவருக்கும் பணத்தின் தேவை எப்போதும் உண்டு. அதுவும் இந்த கொரோனா (COVID-19) கால கட்டத்தில் பணத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கடனளிப்பவரின் ஆதரவை பலர் நாடுகிறார்கள். அதில் நல்லவர் யார் கேட்டவர் யார் என்று அறிந்து அணுக வேண்டும் இல்லையென்றால் சிக்கல் தான்...


kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP


"Kindly share to all"


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES