சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், இரண்டாம் தவணை, 'கோவேக்சின்' தடுப்பூசியை நேற்று போட்டுக் கொண்டார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் இதுவரை, 2.10 லட்சம் சுகாதார பணியாளர்கள்; 22 ஆயிரத்து, 856 முன்கள பணியாளர்கள்; 14 ஆயிரத்து, 186 போலீசார் உட்பட, 2.47 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது, 628 தடுப்பூசி மையங்கள் உள்ளன; அவற்றை, 1,000 ஆக உயர்த்த, மத்திய அரசுக்குகோரிக்கை விடுத்து உள்ளோம்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகமாகவும்; வேலுார், திருவாரூர்,திருவண்ணாமலை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவாகவும் உள்ளன.இதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தடுப்பூசி செலுத்தும் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களையும், முன்கள பணியாளர் பட்டியலில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, மத்திய அரசிடம் தெரிவித்து, அனுமதிக்கு வலியுறுத்தியுள்ளோம்.
இந்தியாவில், 10ல் ஒருவர் மட்டுமே, இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தமிழகத்தில், முதல் நாளிலேயே, 36 சதவீதம் பேர், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், 28 நாள் இடைவெளி என்பதற்கு ஒரு நாள் முன், பின் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.தடுப்பூசி, 10 சதவீதம்வீணாவது இயல்பு தான்; அது பற்றி வரும் செய்தியும் உண்மையே. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவுக்குள் தான், தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் சதவீதம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில், 15 முதல், 20 சதவீதம் தடுப்பூசி வீணாகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது என்று பரப்பப்படும் தகவல் தவறானது. இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த தாமதமாகும் போது, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக தாமதமாகும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE