நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ பட்ட மேற்படிப்புகளான, எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
அதில், தமிழகத்தில் மட்டும், 4,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, நீட் தேர்வு குறித்த அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஏப்ரல், 18ல் பிற்பகல், 2:00 முதல், மாலை, 5:30 மணி வரை 'ஆன்லைனில்' நடைபெற உள்ளது. நாடு முழுதும், 255 நகரங்களில் தேர்வு நடைபெறும். இதற்காக, மார்ச், 15ம் தேதி நள்ளிரவு, 11:55 மணி வரை, https://nbe.edu.in, https://www.natboard.edu.in என்ற, இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட், ஏப்., 12ல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவுகள், மே, 31ல் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE