அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்.
இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவி போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்....
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE