பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்; தலைமைச் செயலகம் முற்றுகை, நூற்றுக்கணக்கானோர் குண்டுகட்டாக கைது
சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அம்ச 7 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்டோர், தலைமைச் செயலகம் நோக்கி சென்று கடற்கரை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த அந்த பகுதியில் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. அதனையடுத்து அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கு, ஊழியர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக சேப்பாக்கம், போர் நினைவுச் சின்னம், கடற்கரைச் சாலை, தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகள் பரபரப்பாகவே காணப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE