file photo |
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தனி ஊதியம், கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.இக்கோரிக்கையை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டத்தில் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன
தனி மேம்படுத்தப்பட்ட சம்பளம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும்,'' என, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்தில், சுகாதாரத் துறை போல வருவாய்த் துறையினரும், 24 மணி நேர பணியில் ஈடுபட்டனர். மேலும், பேரிடர் உள்ளிட்ட காலங்களில், பல மணி நேரம் தொடர்ந்து, வருவாய் அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தனி மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.
மேலும், கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட, 4,000 பணியிடங்கள், வருவாய்த் துறையில் காலியாக உள்ளன. இதனால், மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பதவி உயர்வு வழங்குவது தாமதமாகிறது.இதுபோன்ற, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அரசு கண்டு கொள்ளவில்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 17 முதல், கிராம உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை, 12 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர். இதனால், தேர்தல் பணிகள் தடைபடும்.முதல்வர் இ.பி.எஸ்., வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர், சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE