கொரோனா தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வரும் நாடுகளில் பிரிட்டன், இஸ்ரேல், அமெரிக்கா, போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டுமென்று உலகச் சுகாதார அமைப்பு திடீரென அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வரும் நாடுகளில் பிரிட்டன், இஸ்ரேல், அமெரிக்கா, போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
2021 பிப்ரவரிக்குள் கொரோனாவினா மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த பிரிட்டன் முடிவெடுத்தது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வயதானவர்களுக்கு முதலில் தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரொன தடுப்பூசி அளித்து விட்டு தடுப்பூசி செலுத்தலை இடை நிறுத்தம் செய்ய உலகச் சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மற்ற வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி தேவைப்படும் என்பதால் தடுப்பூசிகள் இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் முன்னிலை நாடுகள் தடுப்பூசி செலுத்தலை இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.
அதாவது தடுப்பூசி கட்டாயம் போட வேண்டிய ஒன்பது முன்னுரிமை நபர்களுக்கு தடுப்பூசிப் போட்ட பிறகு இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் தடுப்பூசி இல்லா ஏழை மற்றும் வளர்து வரும் நாடுகளும் பயனடைய வேண்டியிருப்பதால் முன்னணி நாடுகள் சில நாட்களுக்கு தடுப்பூசியை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE