எங்கிருந்தும் எந்நேரத்திலும்' இணைய வழி சேவை வழியாக, தானியங்கி முறையிலான பட்டா மாற்றம் செய்யும் வசதி, ஜெ., விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை, முதல்வர்பழனிசாமி., துவக்கி வைத்தார்.
கடந்த, 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், அனைத்து குடும்பங்களுக்கும், பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை, அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இயற்கை மரணம் அடைந்தால், இரண்டு லட்சம் ரூபாய்; விபத்தால் மரணம் அடைந்தால், நான்கு லட்சம் ரூபாய்.நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டால், ஒரு லட்சம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கும் வகையில், 'புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி., தலைமை செயலகத்தில் துவக்கி வைத்து, ஒன்பது பேருக்கு, ஆயுள் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார். இதனால், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், 50.96 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர்.
பட்டா மாற்றம்உட்பிரிவு செய்யப்பட தேவையில்லாத, நில பரிவர்த்தனைகளில், பத்திரப்பதிவு முடிந்ததும், தானியங்கியாக வருவாய் துறை பதிவுருக்களில், நில உரிமை மாற்றத்தை ஏற்படுத்தி, உடனுக்குடன் பட்டாக்களை பெறலாம்.இதற்காக, eservices.tn.gov.in என்ற, 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' இணைய வழி சேவையில், நில உரிமைதாரர்கள் இலவசமாக, பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி முறையிலான பட்டா மாற்றம் செய்யும் வசதியை, முதல்வர் துவக்கி வைத்தார். இதன் வழியே, உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு, காலதாமதமின்றி நில பரிவர்த்தனை முடிந்த உடனேயே, பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம்., அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டடம் திறப்பு* தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில், 2.53 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப் பட்டு உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலக கட்டடம், புதுக்கோட்டையில், 2.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, ஆர்.டி.ஓ., அலுவலக கட்டடம் ஆகியவற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் திறந்து வைத்தார்
* நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லுார் கிராமத்தில், மீனவ குடும்பத்தை சேர்ந்த, 670 பேருக்கு, வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு குடும்பத்தினருக்கு, முதல்வர் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE