ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டாலும், பள்ளிக்கு வந்தால் தான் கணிதம், செய்முறை சார்ந்த பாடங்களை கற்பிக்க முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிலபஸ் முடிப்பதும் குதிரை கொம்பாகிவிடும்.குறைக்கப்பட்ட சிலபஸ் அடிப்படையில் தவிர்க்க வேண்டிய பகுதிகளை மாணவர்களுக்கு புரிய வைக்கவே அதிக நாட்களாகி விட்டது.
அதே சமயம் தனியார் புத்தக நிறுவனங்கள், கல்வி இணையதளங்கள் குறைக்கப்பட்ட சிலபஸ்சுக்கு ஏற்ப 'வினா-வங்கி' தயாரித்து வெளியிடுகின்றன. இதே போல் பாடத்திட்ட தயாரிப்பு குழுவின் ஒத்துழைப்போடு 'மினிமம் மெட்டீரியல்' தயாரித்து வழங்கினால் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் சிரமம் இருக்காது. பெற்றோர் ஆசிரியர் கழகமே 'மினிமம் மெட்டீரியல்' தயாரித்து வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE