சில பொருட்களுக்கு நாம் காலாவதி தேதிகளை பார்ப்பதில்லை. அதற்கு காலாவதி தேதி இருக்கிறதா என்பதைக் கூட நாம் கவனிப்பதில்லை. அப்படி நீங்கள் பார்க்கத் தவறும் இந்த பொருட்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அவை என்னென்ன எத்தனை நாள் காலாவதி நாள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
காலணிகள் : காலணிகளுக்கு 6 மாதம் காலாவதி தேதி உள்ளது. அதை சரியான நேரத்தில் அப்புறப்படுத்துவதால் பூஞ்சை தொற்றுகளை தவிர்க்கலாம்.
குளிக்கும் நார் : தேய்த்துக் குளிக்க பயன்படுத்தும் பஞ்சு நார்களுக்கும் நாம் காலாவதி தேதி பார்ப்பதில்லை. அவற்றிற்கும் 6 மாதம்தான் காலாவதி நாள்.
துண்டு : குளித்துவிட்டு, முகம் கழுவிவிட்டு துடைக்கப் பயன்படுத்தப்படும் துண்டுகளுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி நாள். என்னதான் சுத்தமாக துவைத்தாலும் பலனளிக்காது.
பிரஷ் : பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பிரஷுகளுக்கு 3 மாதங்கள்தான் காலாவதி நாள்.
ரன்னிங் ஷூ : ஜிம், ஜாகிங், ரன்னிங் போன்ற ஷூக்களை ஒரு வருடம்தான் பயன்படுத்த வேண்டும்.
சோப்பு தண்ணீர் : பாத்ரூம் டைல்ஸ், கிட்சன் டைல்ஸ், கண்ணாடி, டிவி என துடைக்கப் பயன்படும் சோப்பு தண்ணீர் 3 மாதங்கள் வரைதான் நீடிக்கும். அதன் பிறகு அதன் வாசனை மற்றும் ஆற்றலை இழந்துவிடும். அதனால் 3 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மசாலா வகைகள் : வீட்டில் மிளகு, சீரக, பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலா வகைகளுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி தேதி. அதன் பிறகு அதன் ஃபிளேவர் மாறிவிடும்.
ரப்பர் : குழந்தைகளின் பால் புட்டி அல்லது வாயில் உறிஞ்ச பயன்படும் ரப்பர்களுக்க்கு 2-3 வாரங்கள்தான் காலாவதி தேதி. இல்லையெபில் கிருமிகள் தேங்க ஆரம்பித்துவிடும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE