Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 February 2021

ரேஷன் கார்டில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!


இந்திய அரசு எடுத்த மிக வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்றாகும். ஆத்மநிர்பர் பாரத் அபியானின் (AtmaNirbhar Bharat Abhiyan) கீழ், பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) அதை டிஜிட்டல் கட்டமைப்பின் முயற்சியாக தொடங்கினார்.

ஆதார் மற்றும் பான் அட்டைகளைப் போலவே, ரேஷன் கார்டும் (Ration Card) முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன் பொதுமக்களுக்கு ரேஷன்


பொருட்கள் கிடைக்கிறது. மறுபுறம், இது ஒரு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. மேலும் பல மாநிலங்களில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" (One nation one ration card) முறையை மத்திய அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

ரேஷன் கார்டு (Ration Card) பயன்படுத்துபவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் விவசாயப் பொருட்களின் மாதாந்திர கொடுப்பனவை (monthly allowance of subsidized agricultural commodities) பயன்படுத்தி பலனடைய மத்திய அரசு ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டை (One Nation One Ration Card) என்ற திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

இது இந்திய அரசு எடுத்த மிக வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்றாகும். ஆத்மநிர்பர் பாரத் அபியானின் (AtmaNirbhar Bharat Abhiyan) கீழ், பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) அதை டிஜிட்டல் கட்டமைப்பின் முயற்சியாக தொடங்கினார். இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இது முக்கியமாக புலம்பெயர்ந்தோருக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ரேஷன் கார்டு இல்லாமல் புலம்பெயர்ந்தோரும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். இதனால் ரேஷன் கார்டை நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தப்படலாம் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. நீங்கள் புலம்பெயர்ந்த பின் ரேஷன் கார்டில் வழங்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட முகவரியை மாற்ற விரும்பினாலோ, பின்வரும் செயல்முறைகளை ஆன்லைனில் செய்யலாம் :

ஸ்டெப் 1: www.pdsportal.nic.in என்ற லிங்க்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் உள்நுழையவும்.ஸ்டெப் 2: இந்த வெப்பேஜ்ஜில் முகப்புப் பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள 'மாநில அரசு இணையதளங்கள்' (‘State Government Portals’) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: கிளிக் செய்த பிறகு மாநிலங்களின் பட்டியலைப் பெறுவீர்கள். இப்போது எந்த மாநிலம் வேண்டுமோ அந்த மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த மாநிலத்துடன் தொடர்புடைய மற்றொரு பக்கத்திற்கு இப்போது நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.

ஸ்டெப் 4: நீங்கள் இப்போது 'ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம்' அல்லது 'ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம்' (‘ration card address change form’ or ‘change in ration card form’) தொடர்பான பொருத்தமான லிங்க்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும், லிங்க் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

ஸ்டெப் 5: இப்போது உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

ஸ்டெப் 6: தேவையான விவரங்களை சரியாக நிரப்பி, பின்னர் 'சமர்ப்பி' (Submit) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 7: எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

இந்த செயல்முறையைப் பின்பற்றும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு போர்ட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெவ்வேறு மாநிலங்களுக்கான ஸ்டெப்ஸ்கள் மாறுபடும் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்-  kalvitamilnadu.com -ல்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES