பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலை முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது வரை சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், நிலக்கரி, சுற்றுச்சூழல், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புதிய திட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டங்கள் ஒவ்வொன்றும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. இந்நிலையில், அவற்றில் இருந்து விதிவிலக்காக சில நடைமுறைகள் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.
பஞ்சாப் வங்கி ஏ.டி.எம் கட்டுப்பாடு;
வங்கி மோசடிகளை தவிர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் Non-EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க இன்று முதல் அனுமதி கிடையாது. மேலும், பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளையும் பெற முடியாது. வாடிக்கையாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் அனைவரும் EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். Non-EMV atm என்பது ஏ.டி.எம் கார்டுகளை, ஏ.டி.எம் மெஷினுக்குள் நுழைத்து உடனடியாக கையில் எடுத்துக்கொள்ளும் மெஷின் ஆகும்.
கேஸ் சிலிண்டர் விலை :
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை செய்து அந்த மாதத்துக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர்களின் புதிய விலையை அறிவிப்பார்கள். அதன்படி, கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கோவிட் 19 விதிமுறைகள் தளர்வு : கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்ப கொரோனா விதிமுறைகளில் தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தியேட்டர்களின் இன்று முதல் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதித்துக்கொள்ளலாம். நீச்சல் குளங்களுக்கு அனைத்து வயதினரையும் அனுமதிக்கலாம் உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்டர்நேஷனல் விமான பயணத்துக்கும் தளர்வு வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருவதால் இது குறித்து மத்திய அரசு, விமானப் போக்குவரத்து துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
E- கேட்டரிங் :
இன்று முதல் e - கேட்டரிங் முன்பதிவு சர்வீஸ்களுக்கு ரயில்வேத்துறை அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் 62 ரயில் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயில் பயணங்களுக்கு ஏற்ப பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம். Food On Track செயலி மூலம் இந்த முன்பதிவை செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE