தமிழகத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படும்'' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, தொடர்ந்து தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 2வது கொரோனா அலை வருவதற்கான சாத்திய கூறுகள் மிக மிகக்குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.பிற மாநிலங்களில் நோய் அதிகரிப்பு உள்ளதால் தமிழகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை பின்பற்ற வேண்டும்.
தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முன்களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. முன்பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 50வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE