
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பாடம் நடத்த போதிய கால அவகாசம் இல்லாததால், ஆசிரியர்கள் கூடுதலான நேரம் மனித நேயத்தோடு, தங்கள் குழந்தைகளைபோல் பாடம் நடத்த வேண்டும். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்குவது எளிதான காரியம் இல்லை என்றார்.


No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE