Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 February 2021

ஏப்.15 ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்-கல்வித்துறை செயலாளர் உத்தரவு

ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வுக்கு தயாராகுவதற்கு கால அவகாசம் இருக்குமா? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தன.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி திடீரென்று அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. தேர்வு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES