இந்தியாவில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் மேலும் 1 கோடி பேர் பயனடையும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் அவர் கூறியுள்ளதாவது: வீடுகளில் பயன்படுத்தும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் சமையல் காஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மேலும் 1 கோடி பயனாளிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் எரிவாயு விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. மேலும் நகரங்களில் பைப் லைன் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் திட்டம் மற்றும் ஆட்டோக்களுக்கு காஸ் வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். மேலும் வாகன உரிமையாளர்கள் பொதுவாகன போக்குவரத்துக்கு ைபப் மூலம் காஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ைபப் லைன் மூலம் காஸ் விநியோகம் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE