Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 January 2021

WhatsApp ல் சில முக்கியமான மெசேஜ், பைல்களை உங்களுக்கே அனுப்பிக்கொள்ள ஒரு சூப்பர் வழிமுறை


ஏதேனும் முக்கிய குறிப்புகள், பட்டியல்கள், புகைப்படங்கள் அல்லது ஏதேனும் முக்கிய பைல்கள் போன்றவற்றை நீங்கள் உங்களுக்கே அனுப்பிக்கொள்ள வாட்ஸ்அப்பில் ஒரு எளிய ட்ரிக் உள்ளது.

பிரபல சாட்டிங் சேவை தளமான வாட்ஸ்அப், மெசேஜ்களை அனுப்புவதற்கும், வீடியோ - ஆடியோ கால் செய்வதற்கும், புகைப்படங்களை பகிர்வதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் இதனை ஒரு பெர்சனல் டைரியாகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சொந்தமாக சாட் செய்துகொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் உள்ளது. ஏதேனும் முக்கிய குறிப்புகள், பட்டியல்கள், புகைப்படங்கள் அல்லது ஏதேனும் முக்கிய பைல்கள் போன்றவற்றை நீங்கள் உங்களுக்கே அனுப்பிக்கொள்ள ஒரு எளிய ட்ரிக் உள்ளது.


வாட்ஸ்அப் யூசர்கள் பொதுவாக செய்யும் விஷயங்கள்:

முக்கியமான குறிப்புகள், பட்டியல், கடவுச்சொல் அல்லது வலைத்தளத்திற்கான லிங்க் போன்றவற்றை நீங்கள் திடீரென்று சேமித்து வைக்க வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படும். வழக்கமாக, இதுபோன்ற சூழ்நிலையில், யூசர்கள் வாட்ஸ்அப்பில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நபர்களுக்கு அந்த குறிப்புகளை அனுப்புவார்கள். இந்த விவகாரத்தில், நீங்கள் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்ற நபர்களுக்கும் செல்கின்றன. ஆனால் இந்த ட்ரிக் மூலம் உங்களது முக்கிய குறிப்புக்கள் கொண்ட செய்தியை உங்களை தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள்.

வாட்ஸ்அப்பில் நீங்கள் உங்களுக்கே சாட் செய்துகொள்ளும் வழிமுறை:

1. இந்த முறை மிகவும் எளிதானது. முதலில், உங்கள் மொபைலில் இருந்து கூகுள் க்ரோம் போன்ற ஏதேனும் ஒரு வெப் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள்

.2. அதில் wa.me// என்று டைப் செய்த பிறகு உங்கள் தொலைபேசி எண்ணை நாட்டின் குறியீட்டு எண்ணுடன் சேர்த்து உள்ளிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் வாட்ஸ்அப் எண் 9999119999 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பிரவுசரில் wa.me//+919999119999 என்று டைப் செய்ய வேண்டும்.

3. இப்போது அதில் கன்டின்யூ சாட் என்ற விருப்பம் தோன்றும். அதை டாப் செய்ய வேண்டும்.

4. இப்போது நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப்பின் சாட் பக்கத்திற்கு செல்வீர்கள். அதில் முதல் சாட்டாக உங்கள் தொலைபேசி எண் இருக்கும்.

5. அதில் நீங்கள் பிற சாட்களை போலவே செய்தி, முக்கிய குறிப்புக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பைல்களை அனுப்பிக்கொள்ளலாம்.

6. நீங்கள் விரும்பினால், இந்த சாட்டை உங்கள் தொலைபேசியில் பின் (Pin) செய்து கொள்ளலாம். இதன் மூலம், நீங்கள் எதையாவது எடுக்க வேண்டிய நேரத்தில் உங்கள் சொந்த சாட் பக்கத்தை திறந்து பார்த்துக் கொள்ளலாம்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES